தமிமுக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. சென்னை முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் கருணாநிதியின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
ஆங்காங்கே உள்ள கருணாநிதியின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னையி்ல் கலைஞர், அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக . ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மரியாதை செலுனார்.. அதனை தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை நடந்த அமைதிப் பேரணி்யில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.. அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, பொன்முடி, உதயநிதி, சேகர்பாபு, எம்.பிக்கள் கனிமொழி , டிஆர் பாலு, தயாநிதி மாறன், மற்றும் முதல்வரின் சகோதரர் தமிழரசு, மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். அவர்கள் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
