Skip to content
Home » வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அந்த வகையில்  வரும் 21,22-ல் சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். ஜன.21-ல் காரைக்குடி அழகப்பா பல்கலையில் நூலகத்தை முதலமைச்சர்  திறந்து வைக்கிறார்.

காரைக்குடியில் அன்று இரவு தங்கும் முதல்வர், ஜனவரி 22ம் தேதி காலை சிவகங்கை வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.