சென்னை நங்கநல்லூரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ரூ.67.67 கோடி மதிப்பீட்டில் 12,862 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 7,149 மீட்டர் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும் பழவந்தாங்கல் போலீஸ் ஸ்டேசனில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு. பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வட அமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை தயாரித்துள்ள, ஈரோடு தமிழன்பன் வாழ்க்கை வரலாறு குறித்த மகாகவி என்ற ஆவணப் படத்தை வௌியிட்டார். உடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஆவணப்பட இயக்குநர் அமீர் அப்பாஸ், அமிர்தகணேசன், கவிஞர் கவிமுகில், தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்கத்தலைவர் கவிஞர் தமிழமுதன், விழிகள் பதிப்பகம் நடராசன் ஆகியோர் உள்ளனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா உடனிருந்தனர். முன்னதாக சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து காவலர்களிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.