சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ள நிலையில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது தரமணி 100 அடி சாலையில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பால், பிரெட், பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.