புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டிக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி(மயக்கவியல்),) பட்டப்படிப்பு படித்திட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அக்கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், அம்மாணவிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய திருக்குறள் உரை நூல் மற்றும் பேனாவையும் பரிசாக வழங்கி, வாழ்த்தினார். அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் உடனிருந்தார்.
