வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (சனிக்கிழமை) இரவு வெளிநாடு புறப்படுகிறார். இதற்காக இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் புறப்படுகிறார். பின்னர், அங்கிருந்து சுவீடனுக்கு செல்கிறார். அதன்பிறகு ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணசுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, அவர் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி சென்னை திரும்புகிறார்.