புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக முதல்வரின் ஈராண்டு சாதனை விளக்க மலரினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று வௌியிட்டார்கள்.
இதனை தொடர்ந்து வருவாய் மற்றும் மேலாண்மைத்துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை ரூ.1000
பெறுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினார்கள். பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் தொழில் முனைவோர்களுக்கான காசோலையும் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை எம்பி முத்துராஜா, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்றத் துணை தலைவர் லியாகத் அலி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.