அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் 135வது பிறந்தநாளான இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44.5 கோடி செலவில் தரை மற்றும் பத்து தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் தலைமையில் “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மாசு, மு.பெ. சாமிநாதன், அன்பில் மகேஷ், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. , மேயர் பிரியா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
.