தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைன் இன்று (3.3.2023) ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுவசதி
மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் க. முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. திருநாவுக்கரசர், திரு. அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் கு. செல்வப்பெருந்தகை, அசன் மௌலானா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, எம். கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் . கோபண்ணா மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.