காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்நாடக தொழில் அதிபர்கள், கடற்படை அதிகாரி, வெளிநாட்டுக்காரர் உள்பட 28 ஆண்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ஹெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்லனர். விலை மதிப்பற்ற உயிர்களை காவு கொண்டஅதிர்ச்சிக்குள்ளாக்கும் தாக்குதல் சம்பவம் இது. இந்த தாக்குதலில் சொந்தங்களை இழந்து தவிப்போருக்கு எனது ஆழ்ந்து இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.