முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திருச்சி வருகிறார். இதனால் திமுக நிரவாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பிற்பகலில் சேலம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் காரில் நாமக்கல் செல்கிறார்.
அங்கு சேலம் ரோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ்நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் மாலையில் காா் மூலம் புறப்பட்டு திருச்சி வருகிறார். இரவு 7 மணிக்கு திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் திடீரென திருச்சி வர இருப்பதால் தொண்டா்கள் திருச்சியில் குவிந்து வருகிறார்கள். அதுபோல திருச்சி மாவட்ட எல்லையான தொட்டியம், முசிறி உள்ளிட்ட இடங்களிலும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.