தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (28.3.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 15 கோடி ரூபாய் செலவிலான பல்வேறு முடிவுற்ற பணிகளை நிறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் திரு. வி. அருண்ராய், இ.ஆ.ப, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சோ. மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (28.3.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீட்டிற்கான அறிவுசார் பங்குதாரராக அகமதாபாத் – இந்திய மேலாண்மைக் கழகத்தை (IIM, Ahemadabad) நியமித்து செயலாக்கும் விதமாக, தமிழ்நாடு அரசின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன் மற்றும்
அகமதாபாத் – இந்திய மேலாண்மைக் கழகத்தின் பேராசிரியர் நமன் தேசாய் மற்றும் பேராசிரியர் ஜோஷி ஜேக்கப் ஆகியோருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் வி. அருண்ராய், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. சோ. மதுமதி, இ.ஆ.ப., தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.