Skip to content

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… கரூர் மாவட்டத்தில் 344 இடத்தில் அன்னதானம்…

பள்ளப்பட்டியில் 2026 இல் பொதுமக்களுக்கான நல்லாட்சி மீண்டும் இருக்கும் என திமுகவினர் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் 344 இடங்களில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அலுவலகத்தில் திமுக கட்சி கொடி ஏற்றி தமிழகத்தில் தலைசிறந்த முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் தெரிவித்து. வரக்கூடிய 2026 சட்டமன்றத்

தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி நல்கிட இருக்கும் மு. க ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சி அமைப்பார். மக்களுக்கான நலத்திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் மீண்டும் ஆட்சி அமைவது உறுதி என பள்ளப்பட்டி நகர திமுக நகர மன்ற துணைத் தலைவர் பஷீர் அகமது, நகர மன்ற உறுப்பினர்கள் என சிறப்பாக நாங்கள் பயணிப்போம் என்று உறுதிமொழி ஏற்று பின்னர் பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

error: Content is protected !!