Skip to content
Home » பக்தியை பகல்வேஷமாக்குகிறவர்கள்… வழக்கு போடுகிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

பக்தியை பகல்வேஷமாக்குகிறவர்கள்… வழக்கு போடுகிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை திருவான்மியூரில் இன்று 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம்  நடத்தி வைக்கப்பட்டது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு  சீர் வரிசைகளை வழங்கினார்.  பின்னர் மணமக்களை வாழ்த்தி  முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நான் முதல்வரான பிறகு அறநிலையத்துறை நிகழ்ச்சியில் தான் நான் அதிகம் பங்கேற்றுள்ளேன்.   மூன்று ஆண்டுகளில்,  2226கோவில்களில்  கும்பாபிசேகம் நடத்தி சாதனை படைத்து  உள்ளார்.  7 ஆயிரம் ஏக்கர் கோவில்  நிலத்தை மீட்டு உள்ளார். இது மிகப்பெரிய சாதனை,  பெண்களுக்கு உரிய உரிமையை தருவதற்கு  மணமகன்கள் இங்கு  தட்டு ஏந்தி வந்ததே சாட்சி. 10, 200 கோவில்களுக்கு திருப்பணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  செயல்வீரராக செயல்படுகிறார் அமைச்சர் சேகர்பாபு.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.  கோவில்களுக்கு வழங்கும்  நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து 2  லட்சமாக உயர்த்தி உள்ளோம்.  17 ஆயிரம் கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.  இப்படி ஏராளமான பணிகளை அறநிலையத்துறை  செய்து வருகிறது.  500க்கும் மேற்பட்ட முதியவர்கள் காசி, ராமேஸ்வரம் பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.9 கோவில்களில  அன்னதானம் வழங்கப்படுகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சர் ஆகலாம்என சட்டம் கொண்டு வந்து, அந்த வழக்கை  வெற்றிகரமாக முடித்துள்ளோம்.  கோவில் தொடர்பான வழக்குகளை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறோம்.   தலைவா் கலைஞர் அவர்கள் பராசக்தியில் கூறியது போல, கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது  என்பதற்கான முயற்சி எடுத்து வருகிறோம்.  பக்தியை பகல் வேசத்துக்கு பயன்படுத்துபவர்களால் இந்த சாதனையை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்கு போடுகிறார்கள்.  அனைத்து மதங்களையும் மதித்து செயல்படுகிறது திமுக அரசு.

சரியான ஆளிடம் தான் அறநிலையத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அறநிலையத்துறை செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள்.   மணமக்கள் சிறப்போடு வாழ்ந்திட வேண்டும். 16 பேறுகளையும் பெற்று வாழ வேண்டும்.  16 பேறு என்றால் 16 பிள்ளைகள் அல்ல.(16 பேறுகளையும் முதல்வர் சரளமாக கூறினார்)அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்.  உங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!