முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு உதவிகள் வழங்கி விட்டு இரவில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதால், அவர் பதவி இழந்தார். இன்று காலை பொன்முடி, முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.
