Skip to content
Home » ஸ்பெயின் பயணம்….. சாதனை பயணம்….. சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி

ஸ்பெயின் பயணம்….. சாதனை பயணம்….. சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக  ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த மாதம் ஜனவரி 27-ந் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் 10 நாட்கள் ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:எனது ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளை ஸ்பெயின் மாநாட்டில் எடுத்துரைத்தேன். ஸ்பெயின் நாட்டின் முன்னனி முதலீட்டாளர்களை தனித்தனியாக நேரில் சந்தித்தேன். ரோக்கா, ஹபக் லார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களையும் நான் நேரில் சந்தித்து மகிழ்ச்சி அடைந்தேன்.

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்.  543 தொகுதிகளிலம் வெற்றிபெறுவோம் என்று கூட அவர் சொல்லுவர். காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார்.  என்றார். விஜய் அரசியலுக்கு  வருவது பற்றி கேட்டபோது மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம்  என்று முதல்வர் ஸ்டாலின் தெர்ிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *