Skip to content
Home » திருச்சி ஜிஎச்-ல் திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி ஜிஎச்-ல் திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெரிய மிளகுபாறையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (26.07.2023) திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெரிய மிளகுபாறையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கு நேரில் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மருந்து இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து.

திருச்சிராப்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்து. மருத்துவமனை சமையற்கூடத்தில் நோயாளிகளுக்கு தயாரிக்கப்பட்டு வரும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.

அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்து, மருத்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலவாழ்வு மையத்தின் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை ஆய்வு செய்தப் பின்னர். திருச்சிராப்பள்ளியில் உள்ள 1832 படுக்கை வசதிகள் கொண்ட அரசு பொது மருத்துவமனைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *