சென்னை வில்லிவாக்கம் மேற்கு பகுதி திமுக செயலாளர் கூ.பீ.ஜெயின் மகள் கே.ஜெ.ஜெனி – ரா.மணிகண்டன் ஆகியோரது திருமணம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடந்தது. திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா,
நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பேராசிரியர் அன்பழகனின் மகன் அ.அன்புச்செல்வன், பேராசிரியரின் பேரனும் சட்டமன்ற உறுப்பினருமான அ.வெற்றியழகன் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் மணவிழாவில் கலந்து கொண்டனர்.