Skip to content
Home » சாதி, மத வெறி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சாதி, மத வெறி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மைப் பணியாளர்களைதொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

அம்பேத்கர் காட்டிய பாதையில் திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது. அம்பேத்கருக்கு நிகரான தலைவர் இல்லை என தந்தை பெரியார் கூறினார். அதிகாரிகள், காவலர்கள், தூய்மை ய்மை பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதால் அரசுக்கு நற்பெயர் கிடைத்துள்ளது. தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்பதே சரி.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நிறைவேற்றாத  சமூகநீதி திட்டங்களை  தமிழ்நாட்டில் நிறைவேற்றி உள்ளோம்.

நமது லட்சிய வழியில் ஒரு சில இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஏதோ ஒரு சம்பவம் நடந்தால் இதுதான் பெரியார் மண்ணா என கேள்வி எழுப்புகின்றனர். உங்கள்மதவெறி, சாதி வெறி தமிழ்நாட்டு மண்ணில் ஒருபோதும் வெற்றி பெறாது. மதவெறி சாதிவெறி சக்திகளின் எண்ணம் இந்த மண்ணில்  இந்த ஸ்டாலின்  இருக்கும் வரை நிறைவேறாது. சமூகத்தைபிளவுபடுத்தும் சக்திகளை அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அவர்  பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *