தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், ஆலோசனை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- குற்றம்புரிபவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவ இடங்களுக்கு விரைந்து நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். சோதனை சாவடிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர்பேசினார்.