நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது ட்வீட்டில், இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று அதில் கூறி உள்ளார்.
இது போல அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.