சென்னையில் நேற்று நடந்த வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட 15 லட்சத்துக்
கும் அதிகமானோர் திரண்டனர். இதில் ஜான், மணி, கார்த்திகேயன், தினேஷ்குமார், சீனிவாசன் ஆகிய 5 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். 5 பேர் குடும்பத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் அடுத்த முறை இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும்போது இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறி உள்ளார்.
