மிக்ஜம் புயல் காரணமாக சென்னை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி னார். அத்துடன் திமுக எம்,பி, எம்.எல்.ஏக்கள் அனைவரும் 1மாத ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் 1மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.