தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவுக்கு நேற்று காலையில் திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சந்திரசேகர் ராவுக்கு மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது, வயிற்றில் சிறிய புண் (அல்சர்) இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சந்திரசேகர் ராவுக்கு அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது மற்ற உடல் உறுப்புகள் அனைத்தும் இயல்பாகவே உள்ளன என்று ஏஐஜி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.