Skip to content
Home » முதல்வரின் இன்றைய புதுக்கோட்டை பயணம் ரத்து..

முதல்வரின் இன்றைய புதுக்கோட்டை பயணம் ரத்து..

தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்ற நிலையில், மாலை நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாலை 5 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து திருச்சிக்கு செல்வார் என்றும், இரவு 9 மணியளவில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்-அமைச்சரின் புதுக்கோட்டை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *