Skip to content
Home » முதல்வரை வாசலுக்கு வந்து வரவேற்ற கவர்னர்.. நடந்தது என்ன?

முதல்வரை வாசலுக்கு வந்து வரவேற்ற கவர்னர்.. நடந்தது என்ன?

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுதஇந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இருவரும் அமர்ந்து பேசலாமே என யோசனை வழங்கியது. இதையடுத்து, கவர்னர் ஆர்.என். ரவி மற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்நேரில் சந்தித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள 10 மசோதாக்கள் தொடர்பாக இருவரும் கலந்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னருடனான சந்திப்பின்போது, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு,ரகுபதி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பிற்கு பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் பேசுகையில் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அமைச்சர்கள் வீரமணி, எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வர் தரப்பில் மனு அளிக்கப்பட்டதாகவும் முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக மாளிக்கைக்கு சென்ற  முதல்வரை வாசலில் வந்து கவர்னர் வரவேற்றது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *