மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்கரே. இவர் இன்று சென்னை வந்து, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க .ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அடுத்தாண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினை, ஆதித்ய தாக்கரே சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமைப்பது பற்றி பேசியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.