டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான மத்திய அரசின் நிதி, சமக்ரசிக்ஷா கல்வி நிதி
ஆகியவற்றை உடனே ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை படையால் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த சந்திப்பு சுமாார் 50 நிமிடம் நடந்தது. இந்த சந்திப்பின்போது எம்.பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, தலைமைச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உடனடிருந்தனர்.