Skip to content
Home » முதல்வர் மருந்தகம் தொடங்க விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

முதல்வர் மருந்தகம் தொடங்க விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

  • by Senthil

.தமிழகஅரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம்தேதி சுதந்திர தினவிழா உரையில்,“பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும்“ என்று அறிவித்தார். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கடந்த அக். 29-ம்தேதி முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும்தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகளை முதல்வர் வழங்கினார்.

விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!