தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்களை கொண்ட இவாஞ்சலிகன் சர்ச் ஆப் இந்தியா பேராயராகவும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவர் பேராயர் எஸ்றா சற்குணம் .86 வயதான அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கடந்த 22ம் தேதி எஸ்றா சற்குணம் காலமானார். அவரது உடலுக்கு கிறிஸ்தவ சமூக தலைவர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.