2025-2026 ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடந்தது.
இதையொட்டி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வெ.ஷோபனா,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா. வைத்திநாதன் , தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் டிராட்ஸ்கி மருது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.