மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரமாக அவர்களது கஸ்டடியில் வைத்து டார்ச்சர் செய்து உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கினால் தான், வரும் மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பாஜக போட்டியிட முடியும். அவரை முடக்காவிட்டால் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு குறைந்தபட்ச வாக்கும் கிடைக்காமல் போய்விடும் என்பதால் பாஜக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா, சரத்பவார், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் செந்தில்பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அத்துடன், இது பாஜகவின் பழிவாங்கும் செயல். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக கட்சிகளின் செயல்பாட்டை முடக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் கண்டித்து உள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்ள சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் திமுக வக்கீல்கள் வில்சன் எம்.பி, என்.ஆர். இளங்கோ எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மற்றும் டிஆர் பாலு, ஆ. ராசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.