Skip to content
Home » முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி…. திருச்சி கலெக்டர் அறிவிப்பு

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி…. திருச்சி கலெக்டர் அறிவிப்பு

மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக திருச்சி கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முதலலைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022/23 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பொதுப்பிரிவு பள்ளி கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண்/ பெண் இருபாலரும் பகேற்கும் வகையில் மாவட்ட அளவில் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட உள்ளது.

 

முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அனைவரும்
தமிழ்நாடு விளையாட்டு மேப்பாட்டு ஆணையத்தின் www.sdat.in.govt.in இளயதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை 23.01.2023 -க்குள் பதிவு செய்ய வேண்டும்.

 

* பொதுப்பிரிவு. 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

* கபடி, சிலம்பம், தடகளம். இறகு பந்து, கையுந்துப் பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளுக்கு பொதுப்பிரிவல் உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இதில் 12 வயது முதல் 19வயது வரை உள்ளவர்கள் பள்ளியிலிருந்து போனபிட் சர்டிபிகேட் உடன் கந்துகோள்ள அனுமதிகாப்படுகிறார்கள்.

 

கலை,அறிவியல் ,பொறியியல், மருத்துவம், தொழிநுட்பம் பயிலகம் ஆகிய அனைத்தும் 17 வயது முதல் 25 வயது உள்ளர்கள் கல்லூரியிலிருந்து போனபிட் சர்ட்டிபிகேட்டுடன் கலந்துகொள்ள அமதிக்கப்படுவர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கபடி, சிலம்பம்,தடகளம், கூடை பந்து, இறகு பந்து,கால்பந்து ,வளைகோல் பந்து,நீச்சல் , கையுந்துப்பந்து, மேசைப்பந்து ,கிரிக்கெட், ஆகிய விளையாட்டுகள் மாவட்ட அளவிலும் மற்றும் டென்னிஸ்,பளு தூக்குதல்,கடற்கரை விளையாட்டுப்போட்டிள் ஆகிவை மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளி: வயது வரம்பு இல்லை .மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்.

மாற்றுத்திறனாளி -50 மீட்டர் ஓட்டப்பந்தயம்,

பாதியற்ற மாற்றுத்திறனாளி – 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், சிறப்பு கையுந்து வந்து போட்டி-

மன வளர்ச்சி குன்றியோர் -100 மீட்டர் ஓட்டப்பந்தயம் ,எறிபந்து.

செவித்திறன் மாற்றுத்திறனாளி –
100 மீட்டர் ஓட்டம் ,கபடி.

அரசு ஊழியர்கள்: வயது வரம்பு இலை. பணிபுரியும் அல்லது சொந்த மாவட்டத்தில் கலந்து கொள்வதற்கு துறை ரீதியான கடிதம் மற்றும் ஆடையாள அட்டையுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்

-கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, மற்றும் சதுரங்கம்

பொதுப் பிரிவு மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

பரிசுத்தொகை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு:-
முதல் பரிசு 3000/-
இரண்டாம் பரிசு 2000/-
மூன்றாம் பரிசு 1000/-

மேலும் முககிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டாங்க்கம், திருச்சி தொலைபேசி எண் 0431-2420685 / 7401703494 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *