சட்டமன்றத்தில் இன்று உரையை வாசிக்காமலேயே கவர்னர் ரவி வெளியேறினார். இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதனை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தின் மரபுகளை மீறுவதையே கவர்னர் வழக்கமாக வைத்து உள்ளார். கடந்த ஆண்டுகளில் இல்லாதவைகளை ஒட்டியும் , இருந்தவைகளை வெட்டியும் வாசித்தார். இந்த முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. சட்டப்பேரவை , அரசு, தமிழக மக்களை அவமதிக்கும் கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அரசியல் சட்டப்படி ஆண்டின் தொடக்கத்தில் அரசின் திட்டங்களை வாசிப்பது மரபு. அரசியல் சட்ட கடமைகளை செய்ய மனமில்லாதவர் ஏன் அந்த பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். ?
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.