திருச்சியில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 29ம் தேதி வருகிறார். இதனையடுத்து திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகள்
குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.