தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார். அங்குள்ள சன்னதி தெரு இல்லத்தில் அவர் தங்கி இருந்தார்.இன்றுகாலை அவர் மன்னார்குடி நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்காக ஆயத்தமாக இருந்தார். அப்போது அங்கு ஏராளமானவர்கள் வந்து மனு கொடுத்தனர். அவற்றை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். பின்னர் காரில் ஏறி மன்னார்குடி சென்றுகொண்டிருந்தார்.சவளக்காரன் என்ற இடத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவ,
மாணவிகள் சாலையில் நின்றிருந்தனர். அவர்களை பார்த்த முதல்வர் காரை நிறுத்தினார். அப்போது மாணவிகள், முதல்வரிடம் மனு கொடுத்தனர். அதில் பள்ளி,மற்றும் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இருந்தனர்.மனுக்களை பெற்ற முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.