யுனெஸ்கோ விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜெகதீஷ் UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான #MichelBatisseAward-க்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்.
நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள. ஜெகதீஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.