கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் வேலூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களுக்கான திட்டங்கள், அவற்றின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தேன். நிர்வாகம் நல்ல வகையில் மேம்பட வேண்டும். கள ஆய்வில் சுணக்கம் ஏற்பட்ட திட்ட பணிகள் குறித்து அடையாளம் காணப்பட்டது. பல வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உள்ளது. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஒவ்வொரு திட்டமும் பல கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு நிதி மட்டுமின்றி, கடன் வாங்கியும் திட்டங்களுக்காக செலவிடுகிறோம். திட்டங்களை நிறுவேற்றுவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது. பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:தாமதம் கூடாது