சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளா்களைப் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் சென்றார். இந்த நிலையில், 9 நாட்கள் வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணியளவில் சென்னை விமானநிலையம் வருகிறார். முதல் அமைச்சருக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.