மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. பி.மகாபாரதி, கடந்தவாரம் இங்கு பொறுப்பேற்றார். அது முதல் மயிலாடுதுறை நகரில் பல்வேறு பணிகளை முடுக்கி விட்டு, தினமும் ஆங்காங்கே ஆய்வுப்பணிகளையும் செய்து வருகிறார். நகரை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் அவரது பணியை மாவட்ட மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
மயிலாடுதுறை நகர் கோர்ட்க்குளம் அருகில் தூய்மை நகரம் மயிலாடுதுறை என்னும் தூய்மைப்பணியை தொடங்கி வைத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். நகரை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என அவர் நகராட்சி அதிகாரிகளிடம் கூறினார். இந்த ஆய்வின்போது கலெக்டருடன் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா மற்றும் பலர் உடன் இருந்தனர்.