2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசனுக்கு கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுடன் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் திருவுருவச்சிலையும் வழங்கி சிறப்பித்தார்.