Skip to content

திருச்சியில் மோதல்…. வியாபாரிகளை தாக்கிய 5 வாலிபர்கள் கைது…

திருச்சி காந்திச்சந்தையில் புதன்கிழமை இரவு நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, வியாபாரிகளை தாக்கியதாக 5 பேரை போலீசார் நேற்று  கைது செய்துள்ளனர். திருச்சி காந்திச்சந்தையில் வியாபாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நேற்று முன்தினம் பிப்.5ம் தேதி இரவு மோதல் நடைபெற்றது. இதில், வியாபாரிகளை தாக்கியதுடன், கடைகளையும் அடித்து நொறுக்கியதாக வியாபாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹானஸ்ட்ராஜ் (22), ராஜன் (23), ரெக்ஸ் என்கிற சூசை (22), ரோஜர் (22), சகாய ரிச்சர்டு (23) ஆகிய 5 பேரையும் காந்திச்சந்தை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். இதில், சகாய ச்சர்டு, ரோஜர் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இளைஞர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!