தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-I முதல்நிலைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 7 தேர்வு மையங்களில் 2,551 தேர்வாளர்கள் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. 12.30 மணிக்கு தேர்வு நிறைவு பெறுகிறது.
தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தனர் செய்திருந்தனர். தேர்வர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க, துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை அலுவலர்கள், 2 இயங்கு குழுக்கள் மற்றும் உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட 7 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் தேர்வு பாதுகாப்பு பணிக்கு ஆயுதம் ஏந்திய காவலர்களும் அனைத்து தேர்வு மையங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.