Skip to content
Home » திருச்சி சிட்டி க்ரைம்..

திருச்சி சிட்டி க்ரைம்..

2வது மாடியில் இருந்து விழுந்து எலக்ட்ரீசன் சாவு..

 

திருச்சி பொன்மலைப்பட்டி நேரு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்  (45 )இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று வீட்டில் இரண்டாவது மாடிக்கு மது குடிக்க செல்வகுமார் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த செல்வகுமாரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

 

வாலிபர் தற்கொலை..

 

திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் வயது (31)திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சதாம் உசேன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பிறகு அவரது குடும்பத்தினர் சதாம் உசேன்னை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சதாம் உசேனை பரிசோதனை செய்து பார்த்து அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கல்லூரி மாணவி மாயம்..

திருச்சி திருவெறும்பூர் பிஹெச்எல் டவுன்ஷிப் பகுதி சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகள் ரோஜா (வயது 23) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை இது குறித்து அவரது உறவினர் கிருஷ்ணராஜ் என்பவர் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஜாவை தேடி வருகின்றனர்

 

மூதாட்டி தீயில் கருகி பலி

திருச்சி திருவானைக்காவல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 75) சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் சாமி அறையில் உள்ள விளக்கை ஏற்றினார். அப்பொழுது சேலையில் தீ பற்றி எரிந்து காமாட்சி உடல் முழுவதும் தீ பரவியது இந்த சம்பவத்தில் காயமடைந்த காமாட்சி ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!