Skip to content
Home » திருச்சியில்……போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில்……போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகர் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியூ)சார்பில்  திருச்சி  கலெக்டர்  அலுவலகம் அருகில்  இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு
சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.

மரண விபத்திற்கு 5 ஆண்டு, 10 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
கால்டாக்சி, ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
விபத்து வழக்கில் ஓட்டுனருக்கு சொந்த ஜாமின் வழங்க வேண்டும்.
வாரிய பதிவை எளிமையாக்கி பணப்பலன்களை இரட்டிப்பாக்கி பொங்கல் பண்டிகைக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும்.
நெடுஞ்சாலை, விமான நிலையங்களில் ஓட்டுநர்களுக்கு பார்க்கிங், ஓய்வு அறை வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தலைவர் சீனிவாசன், சங்க
மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர்
அந்தோணிசுரேஷ்,
துணை செயலாளர்கள்
பீர்முகம்மது,
சுப்பிரமணி,
மாவட்ட துணை தலைவர்கள்
வருசைமுகம்மது,
ஜோசப், ராஜ்குமார்
ஆகியோர் பேசினர். இதில்  ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *