தொழிலாளர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பதவியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
தொழிலாளர் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
தொழிலாளர் நல அலுவலகத்தில் பழுதடைந்துள்ள மேல்தூக்கியை (லிப்டை) சரி செய்ய வேண்டும்.
வழக்கிற்காக வருபவர்கள் அமர்வதற்கு தேவையான இருக்கை வசதியை செய்துத்தர வேண்டும்., இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் அனைத்துவித அறுவை சிகிச்சைகளையும் தாமதிக்காமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இ.எஸ்.ஜ மருத்துவமனையில் உள்ள ஊழியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நலவாரிய அலுவலகத்திற்குள்ளே புரோக்கர்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யூ திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, நிர்வாகிகள் சந்திரன், மணிமாறன், இளையராஜா, கருணாநிதி, சந்திரசேகரன், ராஜ் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்