தமிழ்நாடு கவர்னர் ரவி , தமிழ்நாடு என சொல்லக்கூடாது என கூறியதுடன் சட்டமன்றத்தில் தனது உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை பல இடங்களில் உச்சரிக்கவில்லை. அத்துடன் அவர் சட்டமன்றத்தில் இருந்துவெளிநடப்பும் செய்தார். இதை கண்டித்தும், கவர்னர் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியும் ஒன்றிய அரசு ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும் பெரம்பலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு மத்திய பொருளாளர் சிங்கராயர் தலைமை தாங்கினார். பெரம்பலூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.