Skip to content

தஞ்சை வந்த சிஐஎஸ்எப் வீரர்கள்…. விழிப்புணர்வு சைக்கிள் பேரணி… உற்சாக வரவேற்பு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கடலோர பாதுகாப்பை உறுதிசெய்ய கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி வரை 2,773 கிலோ மீட்டர் 8 பெண்கள் உள்பட மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 50 பேர் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி – இன்று மாலை அதிராம்பட்டினத்திற்கு வந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு பொதுமக்கள் மலர்கள் தூவி, ஆரத்தி எடுத்து, தேசிய கொடியை கைகளில் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்

பேட்டிகள். 1. சிவக்குமார் ஐ.பி.எஸ் – மத்திய தொழிலக பாதுகாப்பு படை டி.ஐ.ஜி
2. ராஜலெட்சுமி – சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை
சப்.இன்ஸ்பெக்டர்

கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 8 பெண்கள் உள்பட 50 மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி 25 நாட்கள் திட்டமிடப்பட்டு, மார்ச் 7ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பஹ்ஹாலியிலிருந்து புறப்பட்டுள்ளது. மார்ச் 7ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் புறப்பட்ட விழிப்புணர்வு

சைக்கிள் பேரணியை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்குவங்க மாநிலம் பஹ்ஹாலியிலிருந்து புறப்பட்டு ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டின் சென்னைக்கு வந்து அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக
22 வது நாளான இன்று மாலை தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்திற்கு வந்தது. விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுதிரண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சைக்கிள் பேரணியில் வந்த 50 மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களை முதலில் பொதுமக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து இன்முகத்துடன் பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடிகளை அவர்களிடம் வழங்கி தங்களது மகிழ்ச்சியின் உச்சத்தை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கல்வியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சைக்கிள் பேரணியில் வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அதிராம்பட்டினத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து விழிப்புணர்வு பேரணியில் வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் கூறுகையில், கடலோர பாதுகாப்பை உறுதிசெய்ய கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் பெண்களாகிய நாங்களும் இடம்பெற்று வந்துள்ளோம் என்பதை நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. கடலோர மக்கள் கொடுக்கக்கூடிய உற்சாக வரவேற்பினால் நாங்கள் 22 நாட்கள் கடந்து இன்னும் 3 நாட்களில் வரும் மார்ச் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் எங்களது பயணத்தை நிறைவு செய்ய உள்ளோம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

error: Content is protected !!