பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் இனசேர் ஆலாம் (27) சென்னை திரிசூலம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் திரிசூலம் பெரியார் நகரில் 2-வது தளத்தில் வெளிபுறம் கட்டிட பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்த போது திடிரென வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அலறி துடித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக காலில் குண்டுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் காலில் இருந்த துப்பாக்கி குண்டை டாக்டர்கள் நீக்கினர். இதுகுறித்து பல்லாவரம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கபட்டதை அடுத்து போலீசார் நடத்திய விசாரனையில் மீனம்பாக்கம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட குட்ட மலை பகுதியில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்) துப்பாக்கி சுடும் பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த போது இனசாம் ஆலம் காலில் குண்டு பாய்ந்தது தெரியவந்துள்ளது.
சிஐஎஸ்எப் வீரர்கள் பயிற்சி… தொழிலாளர் காலில் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு….
- by Authour
