Skip to content

சர்க்கஸில் ஆடிய கணவன்-மனைவி….. கீழே விழுந்த மனைவி பலி…. அதிர்ச்சி…வீடியோ…

  • by Authour

சீனாவின் சாங்காய் மாகாணத்தில் சுகோ நகரை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் கணவன்- மனைவி.  இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   கணவன் ,மனைவி இருவரும் இணைந்து சர்க்கஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் நிகழ்த்தி வந்துள்ளனர்.  அந்தரத்தில் தொங்கியபடி ஒருவரை ஒருவர் பிடித்து மிகவும் அபாயகரமான நிகழ்ச்சிகளில் விளையாடும்  திறன் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை  அன்று ஹொவ்ஹா என்கிற கிராமத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்திருக்கிறது .  இதில்  கணவர் கணவன் மனைவி இருவரும் அந்தரத்தில் தொங்கி சாகச நிகழ்ச்சி காட்டி இருக்கிறார்கள் .  அப்போது கணவர் உடலில் கயிறு கட்டி பாதுகாப்புடன்

இருக்க,   மனைவி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அந்தரத்தில் விளையாட,   மனைவியை தன் காலால் பிடிக்க வேண்டும் .

அப்போது கணவரின் கால்கள் நழுவ 22 அடி உயரத்திலிருந்து அந்தப் பெண் கீழே விழுந்து இருக்கிறார்.  இதை பார்த்த சர்க்கஸ் பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.   தன் கண் முன்னே மனைவி கீழே விழுந்தும் எதுவும் செய்ய முடியாமல் அந்தரத்தில் தொங்கியபடியே பார்த்துக் கொண்டிருக்கிறார் கணவர். கீழே விழுந்த பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்கிறார்கள்.  அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும்  பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!